அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை தள்ளிவைப்பு

60பார்த்தது
அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணை தள்ளிவைப்பு
சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான மறுஆய்வு வழக்குகள் மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து எடுத்த வழக்குகள் மீதான விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆட்சி மாற்றம் காரணமாக காவல் துறையினர் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுவது துரதிருஷ்டவசமானது. இது அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் மட்டுமே நடக்கிறது. வேறு நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நடப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.

பின்னர், அரசு தலைமை வழக்கறிஞரின் வாதங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் பதிலளிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி