வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு

69பார்த்தது
வேளாண் வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு
தமிழக அரசின் 2024-25 நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். அதில், “கலைஞரின் அனைத்துக்கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்றிடும் வகையில் 2, 482 கிராம ஊராட்சிகளில் ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதிகரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட 'கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்' எனும் திட்டம் 2021- 2022ஆம் ஆண்டிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024-2025ஆம் ஆண்டிலும், இத்திட்டம், தேர்வு செய்யப்பட்ட 2, 482 கிராம ஊராட்சிகளில், 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி