சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க, புதியதாக கட்டுவதற்கு ₹382 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு தலா ₹4 லட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ₹2 லட்சம் வரை வழங்கிடவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.