சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் அஜித்குமார் விரைவில் நலம் பெற வேண்டுவதாக திரைப்பிரபலங்கள் பலர் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது X பக்கத்தில், 'அஜித் சார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.' எனவும், இயக்குநர் சமுத்திரக்கனி தனது X பக்கத்தில், 'மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஜித்குமார் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்' எனவும் பதிவிட்டுள்ளனர்.