தேர்தல் பத்திரம் ரத்து - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு

66பார்த்தது
தேர்தல் பத்திரம் ரத்து - முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். X தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றமே சரியாக கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படைத்தன்மையுடன் கூடிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்யும். அரசியல் கட்சிகளுக்கு ஜனநாயகம், சமநிலையை மீட்டெடுத்துள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு என அவர் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி