பாஜக தேர்தல் பத்திர ஊழல் - மும்பை டூ டெல்லி செல்ல 120 நாள்

51பார்த்தது
பாஜக தேர்தல் பத்திர ஊழல் - மும்பை டூ டெல்லி செல்ல 120 நாள்
தேர்தல் பத்திரம் வழக்கில் நன்கொடையாளர்களின் பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த விவரங்களை கொடுக்க 140 நாட்கள் கால அவகாசம் வேண்டும் என்று எஸ்பிஐ கால அவகாசம் கேட்டு இருந்தது. இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது X பக்கத்தில், சந்திராயன் நிலவுக்கு செல்ல 41 நாள் ஆனது. அது நவீன அறிவியலின் சாதனை.மும்பையிலிருக்கும் எஸ்பிஐ டில்லியிலிருக்கும் உச்சநீமன்றத்தில் நன்கொடையாளர்களின் பெயரை கொடுக்க 140 நாள் கேட்கிறது. இது நவீன ஊழலின் சாதனை என்று சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி