அதிகாரிகளை மிரட்டி வழக்கு வாங்கிய பாஜக வேட்பாளர் - அமைச்சர் கண்டனம்

56பார்த்தது
அதிகாரிகளை மிரட்டி வழக்கு வாங்கிய பாஜக வேட்பாளர் - அமைச்சர் கண்டனம்
காரை சோதனை செய்த அதிகாரிகளை மிரட்டிய திருப்பூர் பாஜக வேட்பாளர் முருகானந்தத்துக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், அதிகார போதையில் பாஜகவினர் அதிகாரிகளை மட்டுமல்ல பொதுவாக மக்களையே மதிப்பதில்லை ! இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களின் நிலைமை என்ன ஆகும்? அதிகாரிகளின் நிலைமை என்னவாகும்?
சிந்தியுங்கள் என தெரிவித்துள்ளார். மேலும், எனது வாகனம் தினந்தோறும் சோதிக்கப் படுகிறது...ஒவ்வொரு முறையும் வாகனத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதிக்கப்படுகிறது. ஆனால் இப்படி எந்த அதிகாரியையும் மிரட்டுவது ஒருபோதும் சரி அல்ல என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி