பிக்பாஸ்: ரச்சிதாவிடம் அத்துமீறிய ராபர்ட் மாஸ்டர்

66806பார்த்தது
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 30 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகரும், நடன இயக்குநருமான ராபர்ட் மாஸ்டர், சக போட்டியாளர் ரச்சிதாவிடம் முத்தம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த வாரம் ஏற்கனவே ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவிடம் புரோபோஸ் செய்வது போல் நடந்துகொண்டார். ஆனால் ரச்சிதாவோ ராபர்ட்டை அண்ணன் என்றே கூப்பிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்வீட் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில், ராபர்ட் மாஸ்டர் அண்ணனாக இருக்கும் எனக்கு முத்தம் கொடு என மோசமான வகையில் பேசியுள்ளார். அதற்கு ரச்சிதா செய்வதறியாமல் தவிக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.