மதுக்கரை வனப்பகுதியில் குட்டி யானை உயிரிழப்பு

58பார்த்தது
மதுக்கரை வனப்பகுதியில் குட்டி யானை உயிரிழப்பு
கோவை மதுக்கரை வனசரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குட்டியானை உயிரிழந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. சிறுத்தை போன்ற விலங்குகள் தாக்கி இருக்கலாம் என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. குட்டி யானையின் தாய் யானை எங்கே என்ற தகவலும் சரிவர தெரியவில்லை. அங்கே கூடியிருக்கும் வனத்துறையினர் குட்டி யானையை புதைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி