பெரம்பலூர்: அருண் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

561பார்த்தது
பெரம்பலூர்: அருண் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு வாழ்த்து தெரிவித்த திமுகவினர்.

பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு ஜூன் 5ஆம் தேதி நேற்று மாலை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அருண் நேரு வருகை புரிந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த திமுக நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அப்போது திமுக கட்சி நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது நன்றியை அருண் நேரு தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவசங்கர், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற நேருக்கு சால்வே அணிவித்து மரியாதை செய்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி