ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (ஜூன் 6) நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அமெரிக்கா அணி த்ரிலிங்கான வெற்றியை சுவைத்தது. இந்த ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன், “இது ஒரு அற்புதமான கிரிக்கெட். இந்த டி20 உலக கோப்பை தொடரில் எது வேண்டுமானாலும் யாருக்கும் நடக்கலாம். இதுதான் இந்த விளையாட்டின் அழகு.” என்றார்.