அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது - செல்லூர் ராஜூ

79பார்த்தது
அண்ணாமலைக்கு அரசியல் தெரியாது - செல்லூர் ராஜூ
மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேச்சு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், “பாஜக மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகுதான் அவரைப் பற்றி தெரியும். அவருக்கு அரசியலே தெரியாது. அதிமுக ஒரு பீனிக்ஸ் பறவையைப் போன்றது. பல சோதனைகளை கடந்து வந்துள்ளது. அதிமுக என்ற இந்த இயக்கமானது இந்தியாவிலேயே 3ஆவது பெரிய இயக்கமாக இருக்கிறது.