4 நாட்களில் ரூ.425 கோடி வசூலித்த 'அனிமல் '

646பார்த்தது
4 நாட்களில் ரூ.425 கோடி வசூலித்த 'அனிமல் '
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரின் 'அனிமல்' திரைப்படம் கடந்த 4 நாட்களில் வசூல் சாதனை படைத்து படக்குழுவுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. உலகம் முழுவதும் கடந்த 1ஆம் தேதி வெளியான இந்தப் படம் முதல் நாளில் ரூ.116 கோடி வசூல் செய்தது. இரண்டாம் நாளின் அதே ஆரவாரத்துடன் சேர்த்து ரூ.236 கோடி வசூலித்தது. தற்போது 4வது நாளோடு சேர்த்து ரூ.425 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிசில் ஆட்சி செய்கிறது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி