மத்திய அமைச்சராக பதவி ஏற்க பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில், மோடி பதவி ஏற்ற பின் அண்ணாமலையுடன் சேர்த்து 12 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் பதவி வேண்டாம் என அண்ணாமலை கூறியது குறிப்பிடத்தக்கது.