செயலற்ற திமுக அரசைப் போல் அதிமுக இருக்காது
அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னையில் கனமழை பெய்யும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி அதிமுக சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம். செயலற்ற திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அதிமுக அக்கறையோடு இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.