எஃப்எம்சிஜி நிறுவனமான அதானி வில்மர் ஜூன் காலாண்டில் ரூ.313.20 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.78.92 கோடி நஷ்டத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. எண்ணெய்கள் மற்றும் பிற எஃப்எம்சிஜி தயாரிப்புகளின் அதிக விற்பனையே இந்த லாபத்திற்கு காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.12,994.18 கோடியிலிருந்து 10% அதிகரித்து ரூ.14,229.87 கோடியாக உள்ளது.