சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். காதுக்கு கீழ் மூளைக்கு செல்லக்கூடிய நரம்பில் வீக்கம் இருந்ததால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை நலமுடன் வீடு திரும்பியதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தகவல் தெரிவித்தார். வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், அடுத்த வாரம் நடைபெறவுள்ள விடாமுயற்சி படப்பிடிப்பிற்கு அவர் நிச்சயம் செல்வார் எனவும் தெரிவித்துள்ளார்