தலையில் குண்டு பாய்ந்தும் ஆட்டம் போட்ட இளைஞர்!

67பார்த்தது
தலையில் குண்டு பாய்ந்தும் ஆட்டம் போட்ட இளைஞர்!
தலையில் யாரோ துப்பாக்கியால் சுட்டது கூட தெரியாமல் நண்பர்களுடன் 4 நாட்களாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் 21 வயது பிரேசில் இளைஞர். தலையில் வலி இருந்தும் யாரோ கல்லால் அடித்து விட்டார்கள் போல என்று எண்ணி, கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். திடீரென கை செயலிழந்தமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சோதனை செய்த போது தான், அவரது தலையில் 9 மி.மீ குண்டு இருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் சாதுரியமாக குண்டை அகற்றினர்.

தொடர்புடைய செய்தி