சிவகங்கை: காரைக்குடி அருகே பள்ளத்தூர் பேருந்து நிலையத்தில் தங்கி 50 வயது மதிக்கத்தக்க ஆணும், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சாலை ஓரங்களில் கிடக்கும் மது பாட்டில்களை சேகரித்து கடைகளில் போட்டு அதில் வரும் பணத்தில் இருவரும் மது அருந்திவிட்டு இரவு நேரங்களில் சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று சண்டை நடைபெற்றபோது வியாபாரிகள் அவர்களை விரட்டியுள்ளனர்.
இருவரும் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்றுள்ளனர். இன்று (ஜுன் 9) காலை அப்பகுதியில் உடலில் ஆடை இல்லாத நிலையில் அந்தப் பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். அவருடன் இருந்த ஆண் தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.