மிருகக்காட்சிசாலையில் மனிதனை கொன்று தின்ற புலி

83758பார்த்தது
மிருகக்காட்சிசாலையில் மனிதனை கொன்று தின்ற புலி
பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள மிருகக்காட்சிசாலையில் மனித உடலின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. நபர் ஒருவரின் பாதி உடல் மிருகக்காட்சி சாலையின் புதருக்குள் கிடந்துள்ளது. கடந்த புதன்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.
புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும் சோதனை செய்தபோது புலியின் பாதம் அங்குள்ள மண் தரையில் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். புலி சிக்கிய நபர் யார்? என்பது குறித்தும், புலி எப்படி வெளியே வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.