12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது பாதிரியார்

53பார்த்தது
12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது பாதிரியார்
கானா நாட்டில் மிகவும் பிரபலமான 63 வயதான ‘நுமோ’ என்ற பாதிரியார் 12 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கானா நாட்டில் திருமண வயது 18 என அரசு அங்கீரித்து இருக்கும் நிலையில், பாதிரியாரின் இந்த செயல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத போதகர் ஒரு கன்னிப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற நீண்ட கால வழக்கத்தின் காரணமாக இந்த திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது. மத போதகருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், இந்த சர்ச்சைக்குரிய திருமணம் குறித்து கானா நாட்டின் பஅரசு அதிகாரிகள் இதுவரை பதில் அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி