இன்றைய ராசி பலன் - Rasipalan

இன்றைய ராசிபலன் (07/02/2024)

மேஷம்: இன்றைய நாள் உங்கள் பொறுமையை சோதிக்கும். இன்று மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருப்பது சிறந்தது. இன்று தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரலாம். இது உங்களுக்கு சிறிது வருத்தத்தை அளிக்கும். மேலும் உங்கள் உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு காணப்படும். ரிஷபம்: இன்று சமநிலை உணர்வு காணப்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பங்கு வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிக்கும் நல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மிதுனம்: பிரார்த்தனை மற்றும் தொண்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் நன்மை பெறலாம். இன்று அதிர்ஷ்டகரமான நிதிநிலை காணப்படுகின்றது. இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடகம்: இன்றைய செயல்களை பொறுமையுடனும் சமயோசித புத்தியுடனும் மேற்கொள்ள வேண்டும். இன்று பணம் சம்பாதிக்க குறைந்த வாய்ப்பே உள்ளது. பணம் சேமிப்பதும் கடினம். சளி காரணமாக உங்களுக்கு முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. சிம்மம்: இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க நேரலாம். இன்று வரவு செலவு இரண்டும் இணைந்து காணப்படும். நிதியில் ஸ்திரத்தன்மை பராமரிக்க தேவையற்ற செலவுகளை கண்காணியுங்கள். அதிக உடல் உழைப்பு காரணமாக உங்களுக்கு கால் வலி அல்லது முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. கன்னி: இன்று உங்களுக்கு சாதகமான நாள். உறுதி மற்றும் நம்பிக்கை உணர்வு மூலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடையலாம். இன்று அதிக பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. இன்றைய நாளுக்கு தேவையான ஆற்றல் உங்களிடம் நிறைந்து காணப்படும். துலாம்: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் இன்றைய நாளை சிறந்ததாக்கலாம். எதிர்பாராத காரணங்களுக்காக அதிக செலவுகள் ஏற்படும். பண விஷயங்களை கண்காணியுங்கள். தோல் சம்பந்தமான பிரச்சினை உங்களை பாதிக்கும். எண்ணெய் பதார்த்தங்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். விருச்சிகம்: நீங்கள் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். அனுசரணையான போக்கின் மூலம் நன்மை கிட்டும். அதிகரிக்கும் செலவினங்களை எதிர்கொள்ள நேரும். பணத்தை கவனமாகவும் சாதுர்யமாகவும் கையாள வேண்டும். உங்கள் உடல்நிலையை சற்று கவனமாக பார்த்துக்கொள்ளவும். தனுசு: இன்று சில மாற்றங்களும் சில பயணங்களும் காணப்படும். தொண்டு நடவடிக்கைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். நிதிநிலைமையில் குறைந்த வளர்ச்சி காணப்படும். இன்று பணத்தை தக்க வைத்துக் கொள்வது கடினமாக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. ஓய்விற்கு நேரம் ஒதுக்குங்கள். மகரம்: இன்று உங்களுக்கு செழிப்பான நாள். தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். இன்று நிதிநிலைமை மகிழ்சிகரமாக இருக்கும். உங்கள் சேமிப்பு உயரும் வாய்ப்பு உள்ளது. இன்று நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். கும்பம்: இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும் நாள். திறமையாக திட்டமிட்டால் வெற்றி காணலாம். உங்களின் பணம் சம்பாதிக்கும் ஆற்றல் உயரும். ஸ்திரமான நிதிநிலைமைக்கான வாய்ப்பு உள்ளது. நம்பிக்கையான மனநிலை காரணமாக உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மீனம்: இன்று அவ்வளவு எளிதாக எதையும் பெற முடியாது. எனவே கவனமாகவும் உறுதியாகவும் செயல் பட வேண்டிய நாள். இன்று உங்கள் ஒவ்வொரு பணத்தையும் கவனமாக செலவு செய்ய வேண்டும். உங்கள் தாயின் உடல் நலத்திற்காக பணம் செலவு செய்ய நேரும்.