விஜய் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
விஜய் தனது நிலைபாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், "ஆட்சியில் பங்கு கொடுப்போம் என்று விஜய் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்கள். ஆனால், ஆட்சிக்கு வரும் முன்பே கூறுவது ஆணவத்தை காட்டுகிறது. ஆட்சிக்குவர களப்பணியாற்ற வேண்டும். புரிந்து கொள்ள முடியாத நிலையில் மாநாடு நடத்தி முடித்து உள்ளார்" என்று பேட்டியளித்துள்ளார்.