"அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர்"
அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால்தான் வேகமாக வேலை பார்க்கின்றனர் என மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அரசு அதிகாரிகள் பற்றி கூறியுள்ள கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. புனே தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பொறியாளர் தின நிகழ்ச்சியில் உரையாற்றிய கட்கரி, "நமது கட்டமைப்பில் நியூட்டன்களுக்கே அப்பாக்கள் சிலர் உள்ளனர். கோப்புகள் மீது அதிக எடை (பணம்) இருந்தால்தான் அவை வேகமாக செல்கின்றன" என்று கூறியுள்ளார்.