பிரபல உணவு தொழில்நுட்ப விநியோகம் மற்றும் உணவக ஒருங்கிணைப்பு நிறுவனமான Zomato தற்போது புதிய சாதனையை படைத்துள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் பன்மடங்கு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல்-ஜூன் காலாண்டில் Zomato நிறுவனமானது ரூ.253 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. ரூ.235 கோடி நிகர லாபம் கிடைக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அதில் இருந்து அதிகமான லாபத்தை Zomato ஈட்டியுள்ளது.