பிரபல உணவு டெலிவரி நிறுவனமான 'சொமேட்டோ' மும்பையில் புதிய அலுவலகத்தை வாடகைக்கு எடுத்துள்ளது. 84,157 சதுர அடி கொண்ட இந்த அலுவலகத்தை ஆண்டுக்கு சுமார் ரூ.85 கோடி என 5 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்துள்ளது. முதல் 3 ஆண்டுகளுக்கு மாத வாடகையாக ரூ.1.37 கோடியும், மீதமுள்ள ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1.54 கோடி செலுத்த வேண்டும் என ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. 2015-ல் உணவு டெலிவரி சேவையை இந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.