முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாகப் பணியாற்றி, ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் பிஜிலி (60) நெல்லையில் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இருவர் சரணடைந்த நிலையில் மற்ற குற்றவாளிகளை போலீஸ் தேடுகிறது. இந்நிலையில் கொல்லப்படுவதற்கு முன்பு ஜாகீர் வெளியிட்ட வீடியோவில், எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. அதுவும் பெரிய கும்பலே மிரட்டுகிறது உள்ளிட்ட பல பகீர் தகவல்களை வெளியிட்டார்.