அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கியதற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே என்பது போல விரைவில் முதலமைச்சராக வரவுள்ள எடப்பாடியாருக்கு இன்றைக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடியார் நாம் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகும்" என்று பேட்டியளித்துள்ளார்.