ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இன்று யானை சஃபாரி பணியில் ஈடுபட்டிருந்த ஷாபாஸ் (28) என்பவரை யானை தாக்கியது. பலத்த காயமடைந்த ஷாபாஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். யானை ஷாபாஸை தாக்கிக் கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.