சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டியில் இருசக்கர வாகனத்தை வழிமறித்து இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காரில் வந்த மர்ம கும்பல் இளைஞர் மனோஜ் பிரபுவை கொலை செய்துவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.