சென்னையில் எண்ணூர் விரைவு சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலை தடுப்புச் சுவரில் மோதி விபத்து. பின்னால் அமர்ந்திருந்த விஷ்ணு (18) நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், நிஜாம் (18) உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகச் சென்ற இவர்கள், தலைக்கவசம் இல்லாமலும் அதிவேகமாகவும் பைக்கை இயக்கியதுமே விபத்துக்கான காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.