சென்னை கிண்டி மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த பைக், தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்றொரு இளைஞர் சிகிச்சைக்காக அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உயிரிழந்தவர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.