மத்தியப் பிரதேச மாநிலம் ஷாபூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் அஹிர்வார் (20). இவர் பெண் யூடியூபரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ராகுலுடனான காதலை அந்த பெண் முறித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராகுல், இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக, “இது எனது கடைசி வீடியோ, எனக்கு வாழ விருப்பமில்லை. யாரையும் காதலிக்காதீர்கள்” என கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாராணை நடத்தி வருகின்றனர்.