மும்பையில் தொழில் துறை நிபுணராக உள்ள பெண் ஒருவரை சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவர் இரவில் வேலை வாய்ப்பு கேட்டு தொடர்பு கொண்டுள்ளார். அப்போது அவர் திடீரென அப்பெண்ணிடம் உன் இடுப்பை காட்டு நான் உனக்கு ரூ.5 ஆயிரம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பின் அந்த பெண் உரையாடல் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட்டாக வெளியிட்டுள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் தான் மது குடித்திருந்ததால் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.