கேரளா: நித்யா மோகனன் (28) என்ற இளம்பெண்ணுக்கு தனியார் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. அதிக ரத்தப்போக்கு காரணமாக நித்யாவின் கருப்பை அகற்றப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதற்கு குடும்பத்தினர் சம்மதித்தனர். அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறிய மருத்துவர்கள் நித்யா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.