சீனா: சோங்கிங் பகுதியில் இளம் பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பூனையால் வேலையை இழந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம் பெண் தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து வைத்துள்ளார். அதே சமயம் வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து கடிதத்தை அனுப்பாமலேயே இருந்துள்ளார். ஆனால், அவரது பூனை தவறுதலாக ENTER பட்டனை அழுத்தியுள்ளது. இறுதியில் அவர் வேலையையும், வருடாந்திர ஊக்கத்தொகையையும் இழந்துள்ளார்.