கர்நாடகா: பெங்களூரு பெல்லந்தூரில் இளம்பெண் ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது ஒரு ஆட்டோ உரசியுள்லது. இதில் கோபமடைந்த அந்த பெண், ஆட்டோ டிரைவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டது மட்டுமின்றி அவரை செருப்பால் தாக்கியுள்ளார். மேலும், இந்தியில் அவரை திட்டியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் கன்னடர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, ஆட்டோ டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.