தெலங்கானா: பிரத்யூஷா (24) என்ற இளம்பெண் பட்டப்படிப்பு முடித்துவிட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு வேலைக்கு முயன்று வந்தார். தொடர்ந்து பல தேர்வுகளில் பங்கேற்று வந்த அவருக்கு தேவையான மதிப்பெண்கள் கிடைக்காததால் தொடர்ச்சியாக தேர்வில் தோல்வியடைந்தார். இதனால் விரக்தியடைந்த பிரத்யூஷா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.