தெலங்கானா: சூர்யாபேட்டையை சேர்ந்த கிருஷ்ணா என்ற இளைஞரும், பார்கவி என்ற இளம்பெண்ணும் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்னர் பார்கவியின் உறவினர் மகேஷ் அழைப்பின் பேரில் அவரை காண சென்ற கிருஷ்ணா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தனது குடும்பத்தார் தான் கிருஷ்ணாவை கொன்றதாக பார்கவி தெரிவித்துள்ள நிலையில் நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.