கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் மகளிர் விடுதிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், காதலியை வெறித்தனமாக குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த சுஜித் என்பவரும், செவிலி பிரியா என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரிடம் பேசுவதையும் பழகுவதையும் பிரியா நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுஜித், பிரியாவை குத்தியுள்ளார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.