Reddit என்ற தளத்தில் பெங்களூருவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தினமும் 14 - 16 மணி நேரம் வரை வேலை செய்கிறேன். 24 கிலோ எடை கூடிவிட்டேன். பணிச்சுமையால் வழக்கமாக தூங்கும் நேரம் குலைந்துள்ளது. 2½ ஆண்டுகளாக பக்கத்தில் உள்ள இடங்களுக்கு கூட செல்ல முடியவில்லை. எனது காதலியும் புறக்கணித்துவிட்டார். பணிச்சூழல் கடும் மன அழுத்தத்தை தருகிறது” என குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த சக பயனர்கள், கட்டாயம் ப்ரேக் எடுக்குமாறு அவருக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.