டெல்லி: காஸியாபாத்தின் கோரா காலனியைச் சேர்ந்த அமித் திவாரி (23) தன் முறைப்பெண்ணான ஷில்பா பாண்டே உடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அமித்துக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டதால், அவரது குடும்பத்தைவிட்டுப் பிரிந்து தன்னுடன் தனியாகக் குடித்தனம் நடத்த ஷில்பா தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அமித் ஷில்பாவை கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இதன்பின், சூட்கேஸில் அந்தப் பெண்ணின் உடலை வைத்து காஸிபூர் காகித மண்டி பகுதியருகே தீ வைத்து எரித்துள்ளார்.