பாலாடை ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஓர் உணவுப் பொருள். இது சாப்பிட மட்டுமல்ல, சருமத்தை பாதுகாக்கவும் அழகு சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, சருமத்திற்கு ஈரப்பதத்தையும் சருமம் வறண்டு போவதை தடுக்கவும் உதவுகிறது. ஒரு டீ ஸ்பூன் பாலாடைக்கட்டியை எடுத்து 15-20 நிமிடங்கள் முகத்தில் போட்டு மசாஜ் செய்யுங்கள். பிறகு 10 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.