நெல்லிக்காயை வைத்து சூப்பர் புளிக்குழம்பு செய்யலாம்
By Ram 67பார்த்ததுநெல்லிக்காயை வேகவைத்து விதையை நீக்கி, தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள் தாளித்து தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். அதில் புளிக்கரைசல் ஊற்றி குழம்பு மசாலா தூள், உப்பு, அரைத்த நெல்லிக்காய் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான, சத்துமிக்க, நெல்லிக்காய் குழம்பு தயார். இதை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.