மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில், மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை அறிவித்தபின், உடலை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது ஸ்பீட் பிரேக்கரில் ஏறியிறங்கிய அதிர்வில் பாண்டுரங்கன் (65) என்பவர் உயிர்த்தெழுந்துள்ளார். இச்சம்பவத்தை அறிந்து இன்ப அதிர்ச்சியில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.