சட்டப்பேரவையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்திற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச். 21) பதிலளித்து வரும் நிலையில் தவாக தலைவர் வேல்முருகன் அவைக்கு வராமல் புறக்கணித்துள்ளார். திமுக கூட்டணியில் வேல்முருகன் கட்சி உள்ள சூழலில் நேற்று (மார்ச். 20) அவரின் செயலை முதல்வர் ஸ்டாலின் கண்டித்திருந்தார். சபாநாயகர் அப்பாவு வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க அவர் வலியுறுத்தியிருந்தார்.