வங்கக்கடலில் அடுத்த வார இறுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதி பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கடலூர், நாகை, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி, காரைக்காலில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.