மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் (ஜூலை 12, 13) தமிழ்நாட்டில் உள்ள 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் மாலை அல்லது இரவில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது.