தவெக தலைவர் விஜய்க்கு ஏற்கனவே மத்திய அரசின் 'Y' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட்டுக்கு பிறகு விஜய் நேரடியாக மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்க உள்ளார். 2026 தேர்தலில் விஜய் தனித்து போட்டி என அறிவித்துள்ளார். ஒருவேளை அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு Y+ பாதுகாப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே அச்சுறுத்தல் காரணமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.