உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் அடித்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து 74 ரன்கள் முன்னிலையுடன் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, 2-வது இன்னிங்ஸில் 207 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இந்நிலையில், 282 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா 2-வது இன்னிங்ஸை தொடங்குகிறது.